top news India today abp nadu morning top India news February 11th 2024 know full details | Morning Headlines: மக்களவையில் பிரதமர் மோடி உரை! அமித்ஷா திட்டவட்டம்




PM Modi: 17வது மக்களவையில் பிரதமர் மோடியின் உரை – என்னென்ன இடம் பெற்றது?

பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்பு உரையில் கடந்த ஐந்து ஆண்டுகள் பல தலைமுறைகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது  எனக் கூறியுள்ளார்.  
17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த ஐந்தாண்டுகள் நாட்டில் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானது. நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்திய பல சீர்திருத்தங்கள் கடந்த ஐந்து ஆண்டில் நடந்தன.” மேலும் படிக்க..


Lok Shaba Election: கழட்டிவிடப்பட்ட காங்கிரஸ்; பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்தே போட்டி; கெஜ்ரிவால் புது ட்விஸ்ட்

இந்தியா முழுவதும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றது. ஆட்சியில் உள்ள பாஜகவை மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வரவிடக்கூடாது என நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தல் திட்டங்களை உருவாக்கி வருகின்றது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இது I.N.D.I.A கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சியினர் நிதிஷ் குமாரின் முடிவால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறும் அளவிற்கு விமர்சித்து தள்ளினர். மேலும் படிக்க..


Amit Shah: மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் – அமித்ஷா திட்டவட்டம்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..


திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய போராட்டம்! மே.வங்கத்தில் 144 உத்தரவு – நடந்தது என்ன?

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பலரது நிலங்களை அபகரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க..


PM Modi Sleep : ”பிரதமர் மோடி தினமும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குகிறார்”.. சுவாரஸ்ய தகவலை சொன்ன எல்.முருகன்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. முதல் நாளான 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து இரு அவைகளிலும் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக இடைக்கால பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் தற்போது வரை நடந்து வருகிறது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link