Loksabha Election 2024: ”விஜய பிரபாகர் எனக்கு மகன் மாதிரி“ : ராதிகா சரத்குமார் பேட்டி..

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் தனக்கு மகன் மாதிரி என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், அதிமுக கட்சி தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், கடந்த சில தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைத்து தனித்து போட்டியிடுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சரத்குமாரின் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார். அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் பாஜக தரப்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். அப்போது ராதிகா சரத்குமார் விஜய பிரபாகர் தனக்கும் மகன் தான் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மேலிடத்தில் இருந்து இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விருதுநகர் தொகுதி எங்களுக்கு புதிதல்ல. பிரச்சாரத்திற்காக பலமுறை இங்கு வருகை தந்துள்ளோம். காமராஜருக்கு மணிமண்டபம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாணிக்கம் தாக்கூர் தொகுது மக்களை காண வரவில்லை என்றும் மக்களுக்கான பணியை செய்யவில்லை என்றும் மக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது. விஜய பிரபாகரன் எனக்கும் மகன் மாதிரிதான். ஆனால் இது நாடாளுமன்ற தேர்தல், அதை தான் நாம் முக்கியமாக பார்க்கவேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்த தொகுதிக்கு என்ன செய்ய முடியும், மக்களுக்கு நல்ல திட்டம் தீட்ட வேண்டும், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு வியாபாரம் மேம்பட என்ன செய்யவேண்டும் என்பது தான் தற்போது என் மனதில் இருக்கும் ஒரே எண்ணம். பாஜகவின் கடின உழைப்பால் இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Source link