நடிகை நித்யா மேனன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது அடுத்த படமான ”டியர் எக்ஸஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . தமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் நித்யா மேனன். ஸ்டார் அந்தஸ்த்திற்காக இல்லாமல் தன்னை கவர்ந்த கதைகள், மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானர் நித்யா மேனன் . இதனைத் தொடர்ந்து வெப்பம், மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மனி , காஞ்சனா 2 , மெர்சல் , 24 , சைக்கோ, இருமுகன் , திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஓ காதல் கண்மணி நித்யா மேனனின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது. நித்யா மேனன் பிறந்தநாளை ஒட்டி அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
டியர் எக்ஸஸ் ( Dear Exes)
அறிமுக இயக்குநர் காமினி இயக்கத்தில் நித்யா மேனன் நடிக்கும் படம் டியர் எக்ஸஸ். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா ப்ரோடக்ஷன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. காதலில் தோல்வி அடைந்த ஆண்களை சூப் பாய்ஸ் என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படியான் சூப் பாய்ஸ்களைப் பற்றி எத்தனையோ படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த முறை ஒரு சின்ன மாற்றத்திற்கு காதலில் தோல்வி அடைந்த ஒரு பெண்ணைப் பற்றிய படமாக இந்த படம் உருவாக இருக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் படக்குழு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் காண