நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று டெல்லி. நாட்டின் தலைநகரமான டெல்லியில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மக்கள் குடும்பங்களுடன் கோயில்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிகவளாகங்கள், திரையரங்குகளுக்கு சென்று மகிழ்ந்தனர்.

67.47 லட்சம் மக்கள்:

டெல்லியில் புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1ம் தேதி மெட்ரோவில் மட்டும் 67.47 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு இந்தளவு மக்கள் மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி 49.16 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் 17 லட்சம் மக்கள் அதிகளவில் மக்கள் பயணித்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 23.66 லட்சம் மக்கள் டெல்லி மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு 18.07 லட்சம் மக்கள் மட்டுமே மெட்ரோவில் பயணித்துள்ளனர். அந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மெட்ரோவில் பயணித்தோரின் எண்ணிக்கை மிக மிக குறைவாக அமைந்தது.

குவிந்த மக்கள்:

கடந்த 2020ம் ஆண்டு டெல்லி மெட்ரோவில் 55.26 லட்சம் மக்கள் புத்தாண்டு தினத்தில் பயணித்தனர். கடந்த 2019ம் ஆண்டு 50.16 லட்சம் மக்கள் பயணித்தனர். கடந்த 6 ஆண்டுகள் தரவுகளின் படி, டெல்லி மெட்ரோவில் முன்னெப்போதும் இல்லாத அளவு புத்தாண்டு தினத்தில் மக்கள் பயணித்துள்ளனர்.

இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டெல்லியில் உள்ள ராஜீவ் சௌக், படேல்சௌக் மற்றும் மத்திய தலைமைச் செயலகங்களில் மக்கள் வரிசை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வௌியில் வரை டிக்கெட் எடுக்க நின்றனர்.

டிசம்பர் 31ம் தேதி:

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் மட்டும் டெல்லியில் மெட்ரோவில் 48.16 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 55.29 லட்சம் மக்கள் பயணித்ததே கடந்த 6 ஆண்டுகளில் டிசம்பர் 31ம் தேதி அதிகளவு பயணிகள் பயணித்ததே அந்தாண்டு மட்டுமே ஆகும். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 50.67 லட்சம் மக்கள் மெட்ரோவில் டெல்லியில் பயணித்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 18.86 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 27.45 லட்சம் மக்கள் மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 47.40 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Быстро собираем первичную информацию, оцениваем риски и предлагаем подходящий вариант обращения. Подробнее – [url=https://narkologicheskaya-klinika-krasnodar4.ru/]анонимная наркологическая клиника[/url]
bookkeeping firm montenegro accounting firm
A clean piece that knew exactly what it wanted to say and said it, and a look at bayharborcraftmarket maintained…
Honestly slowed down to read this carefully which is not my default, and a look at pineharboroutpost kept me in…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘உ.பி. தேர்தலில் அயோத்தியில் இருந்து போட்டியிடு’: முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தைரியம் கொடுத்த அகிலேஷ் யாதவ் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

இடைத்தேர்தல் முடிவுகள் 2026: வங்காளம், தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரியில் கூர்ந்து கவனிக்கப்பட்ட தீர்ப்புகள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது’: ஓஎஸ்டி மற்றும் 5 பேர் மீது சிபிஐ சோதனையில் மான் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

அக்டோபர் 10 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் தொண்டர்கள் யாரும் திரட்டப்பட மாட்டார்கள் என்று பஜ்ரங் தளம் தெரிவித்துள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

பல மாநில ஐபிபிஎஸ் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியை சிபிஐ முறியடித்தது; CGST இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

balance sheet financial reporting in podgorica