‘Not A Specialist’ Rahul Removed From Wicketkeeping Role For England Tests

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற் கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும், இன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெறும் 2 வது போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்த தொடர் முடிந்த பிறகு இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணி வீரர்களும் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, 16 வீரர்களை கொண்ட அந்த பட்டியலில் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர்களான கே.எல்.ராகுல், கே.எஸ் பரத் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்நிலையில், பிசிசிஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கே.எல்.ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு முழுநேர பேட்ஸ்மேன் ஆக  விளையாடுவார். அவர் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளது.
பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே.எல்.ராகுல் இனி முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவார். விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் தொடர்ந்து பயணிக்கும் பட்சத்தில் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர் கிடையாது. எனவே அந்த இடத்தில் நாங்கள் ஒரு முழுமையான ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பரை கொண்டு வர நினைக்கிறோம். அதன் காரணமாக பேட்டிங்கில் திறன் வாய்ந்த அவர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுநேர பேட்ஸ்ட்மேனாக மட்டுமே விளையாடுவார்” என்று அறிவித்துள்ளது.
முன்னதாக, கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரேல் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்களாக இருக்கின்றனர். இதில், கே.எஸ்.பரத் ஒரு சில போட்டிகளில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே விக்கெட் கீப்பராக இருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: IND vs AFG 2nd T20I: இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? தொடரில் நீடிக்க என்ன செய்யப்போகிறது ஆப்கானிஸ்தான்?
 
மேலும் படிக்க: Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்… இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!
 
 

Source link