தூத்துக்கூடியில் நேற்று சனிக்கிழமை காலையில் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், இரவு மேலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அண்ணா நகர்4-வது தெருவை சேர்ந்த ஈனமுத்து மகன் செந்தில் ஆறுமுகம் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை ஏற்கனவே
இன்று அதிகாலை குமஸ்த்தா ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரவு ஒருவர் மீண்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அதிமுக முன்னால் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார் என்பவரின் அண்ணன் ஈனமுத்து என்பவரது மகன் செந்தில் ஆறுமுகம். இவர், தூத்துக்குடி அண்ணா நகர் 4-ஆவது தெருவில் வசித்து வந்தார்.
வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ள இவர், தூத்துக்குடி அண்ணா நகர் 3-ஆவது தெருவில் மெடிக்கல் சாப் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து உமா தங்கம் என்ற மனைவியும் ரெஜினா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தனது வீடு இருக்கக்கூடிய தூத்துக்குடி அண்ணா நகர் 4-ஆவது தெருவில் நின்று கொண்டிருந்த செந்தில் ஆறுமுகத்தை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நமர்கள் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் செந்தில் ஆறுமுகத்தை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், கொலை செய்துவிட்டு தப்பி சென்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தென்பாகம் காவல்துறையினர், செந்தில் ஆறுமுகத்தின் தங்கை கணவரான கோபி மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் அதிகாலையில் குமஸ்த்தா ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரவு ஒருவர் மீண்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.