Last Updated:
காயம் காரணமாக விளையாடாவிட்டாலும், தனது அணியை நேரில் வந்து ஊக்குவிக்கும் அவரது செயல் சிஎஸ்கே ரசிகர்களைப் நெகிழ வைத்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 63-வது லீக் போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மைதானத்திற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
இந்த சீசன் முழுவதும் தசைநார் காயம் காரணமாக தோனியால் போட்டிகளில் விளையாட முடியவில்லை. மேலும், பிளே-ஆஃப் ரேசில் இருக்கும் அணியின் தற்போதைய காம்பினேஷனை கலைக்க அவர் விரும்பவில்லை என்றும் செய்திகள் வெளியாயின.
இவற்றுக்கு இடையே, இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கடைசி ஹோம் மேட்ச் ஆன இன்றைய போட்டிக்கு முன்னதாக, அவருக்கு கட்டைவிரலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. இத்தகைய சூழலில், அவர் மைதானத்திற்குள் வந்து சக வீரர்களுடன் இணைந்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது தோனி குறித்துப் பேசிய அவர், தோனி மைதானத்திற்கு வந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியதோடு, ஆனால் அவர் இன்னும் விளையாடுவதற்கான முழு உடற்தகுதியை எட்டவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
உடற்தகுதி இல்லாததால் அவர் இன்றைய போட்டியின் ஆடும் லெவனிலும் இடம்பெறவில்லை. காயம் காரணமாக விளையாடாவிட்டாலும், தனது அணியை நேரில் வந்து ஊக்குவிக்கும் அவரது செயல் சிஎஸ்கே ரசிகர்களைப் நெகிழ வைத்துள்ளது.
FINALLY, END OF A LEGENDARY ERA 🥺🫶❤️
MS Dhoni is set to receive a farewell at M. A. Chidambaram Stadium as fans prepare to witness an emotional goodbye to one of cricket’s greatest icons. The atmosphere at Chepauk is expected to be filled with tears, chants, and unforgettable… pic.twitter.com/NS4xEsOq1F— Muffatball vikrant (@Vikrant_1589) May 18, 2026
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை அணி 180 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டு இடைவேளையின்போது தோனி சென்னை அணி வீரர்களுடன் இணைந்து குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியால் ஆரவாரம் எழுப்பினர்.
May 18, 2026 10:23 PM IST























