செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?

விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து பல முன்னேற்றங்களை  அடைந்து வருகிறது. சூரியன், செவ்வாய், நிலவு என விண்வெளியில் பலவற்றையும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா ஆதித்யா, ககன்யான், சந்திரயான் என பல செயற்கை கோள்களையும் ஏவி வருகிறது.

இன்சாட் செயற்கை கோள்:

இந்த செயற்கை கோள்களானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. அங்குள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. உள்பட ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது.

செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படுவதை பொதுமக்கள், மாணவர்கள் பார்க்க அனுமதிக்கப்படும். இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 17ம் தேதி இன்சாட் – 3 டி எஸ் செயற்கைகோள் வரும் 17ம் தேதி சனிக்கிழமை ஏவப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு இந்த செயற்கை கோள் ஏவப்பட உள்ளது.

முன்பதிவு:

ஒவ்வொரு முறையும் செயற்கை கோள்கள் ஏவப்படும்போது அதை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். அந்த வகையில், இன்சாட் 3 டி.எஸ். செயற்கை கோளை ஏவப்படுவதை பார்ப்பதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுவதை பார்ப்பதை நேரில் பார்க்க விரும்புபவர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதளத்தின் உள்ளே சென்று பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவை மாலை 6.30 மணிக்கு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் ராக்கெட் ஏவுவதை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் அமர்ந்து பார்க்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமான மாடம் உள்ளது. நாட்டில் உள்ள ஒரே விண்வெளி ஏவுதளமாக ஸ்ரீஹரிகோட்டா மட்டுமே தற்போது வரை உள்ளது. தற்போது, தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்திலும் செயற்கை கோள்களை ஏவுவதற்கான ஏவுதளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!

மேலும் படிக்க: UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்

Source link