தமிழ் திரையுலகின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த் நடித்த படங்களையும், கதாபாத்திரங்களையும் அவரின் ரசிகர்கள் ஒரு போதும் மறப்பதே இல்லை. ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதிகா, மீனா என எக்கச்சக்கமான ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அந்த வகையில் 1978ம் ஆண்டு வெளியான ‘பிரியா’ படத்தில் அவரின் ஜோடியாக நடித்த நடிகை அஸ்னா ஹமீத் தற்போதைய நிலை என்ன? அவர் என்ன செய்கிறார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான ‘பிரியா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை ஸ்ரீதேவி மற்றும் நடிகை அஸ்னா ஹமீத் நடித்திருந்தனர். மேலும் அப்படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்தில் ரஜினிகாந்த் – அஸ்னா ஹமீத் கெமிஸ்ட்ரி மக்களை அதிகம் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக அவர்கள் இருவரின் டூயட் பாடல்களாக ‘அத்தனை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே…’ மற்றும் “என்னுயிர் நீதானே… உன் உயிர் நான் தானே…’ பாடல்கள் இன்றும் இனிமையான ராகங்கள் வரிசையில் இடம்பெற்று இருக்கும் பிரபலமான ரஜினி ஹிட்ஸ்.
மலாய் இந்திய பெண்ணாக சுபத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் வெளியானது. முதல் படமே அஸ்னா ஹமீத்துக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘பிரியா ‘ திரைப்படம்தான் அவர் நடித்த ஒரே இந்திய திரைப்படம்.
70 வயதாகும் அஸ்னா ஹமீத் ஏராளமான மலாய் டிராமாக்களில் நடித்துள்ளார். 2022ம் ஆண்டு ஹூஹைமி இயக்கத்தில் வெளியான தொலைக்காட்சி நாடகமான வனிதா மிலிக் துவான் புத்ராவில் நடித்திருந்தார்.
அஸ்னா ஹமீத் மலாய் திரையுலகில் பிஸியாக ஈடுபட்டு வந்தாலும், அவ்வப்போது வாசனை திரவியங்களை விற்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது ஸ்டால்ஸ் செட் செய்து தன்னுடைய வாசனை திரவியங்களை விற்று வருகிறார். அந்த வகையில் அவர் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் கவனம் பெற்று வருகிறது.
மேலும் காண