தக் லைஃப்
தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பாவான்களான மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்க்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச காம்போவான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
மேலும் நடிகைகள் த்ரிஷா அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் எனப் பலர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியான. மேலும் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முன்னதாக சைபீரியாவில் நடைபெற்று முடிந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன் தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாகவும் அவருக்கு பதிலாக இக்கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு அல்லது நானி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இத்தகவல் தக் லைஃப் படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களை கொஞ்சம் அப்சட்டாக்கியது. இந்நிலையில், துல்கர் சல்மான் வரிசையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியும் தக் லைஃப் படத்தில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி சைரன் படத்துக்குப் பிறகு காதலிக்க நேரமில்லை, தனி ஒருவன் 2, பிரதர், ஜீனி, ஜனகணமண என அடுத்தடுத்து 2025ஆம் ஆண்டு வரை பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக தற்போது தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காண