நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட புகைப்படத்தை நடிகர் சித்தார் இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளார்.இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டனர் என தகவ்ல் வெளியானது.இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதி தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இது குறித்து வெளியாகாமல் சஸ்பென்சாகவே இருந்தது. சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து “ஆம், அவர் ஓகே சொல்லிவிட்டார்.” (She Sais yes! Engaged.) எனக் கூறி நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.இதற்கு அதிதி ‘He said yes! Engaged’ என்று கமென்ட் செய்துள்ளார்.நிச்சயம் முடிந்துள்ளதே தவிர திருமணம் முடியவில்லை என, இருவரும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கிறார்கள்.
Published at : 28 Mar 2024 04:18 PM (IST)
பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி
மேலும் காண