Mosaic Artist Prepares Lord Ram’s Portrait Using 14 Lakh Diyas Ahead Of Ram Mandir Event In Ayodhya | Ayodhya: அயோத்தியில் 14 லட்சம் விளக்குகளால் உருவான ராமர் உருவம்

Ayodhya: அயோத்யாவில் 14 லட்சம் விளக்குகளால் வடிவமைக்கப்பட்ட ராமர் உருவத்தை சுற்றி, பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர்.
அயோத்யா ராமர் கோயில்:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்யாவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கான, குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஒட்டுமொத்த அயோத்யா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவினை முன்னிட்டு நகரம் முழுவதும் பக்தர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மொசைக் கலைஞர் அனில் குமார் சாகேத் மகாவித்யாலயாவில்,  14 லட்சம் விளக்குகளைப் பயன்படுத்தி ராமரின் உருவப்படத்தை தயார் செய்துள்ளார்.

#WATCH | Ayodhya, Uttar Pradesh: Drone visuals of Lord Ram portrait prepared by Mosaic artist Anil Kumar using 14 lakh diyas at Saket Mahavidyalaya(Courtesy: Office of Ashwini Chaubey) pic.twitter.com/62XnuHHMbS
— ANI (@ANI) January 13, 2024

14 லட்சம் விளக்குகளாலான ராமர்:
பல்வேறு வண்ணங்களாலான விளக்குகளை கொண்டு வில்லை ஏந்தி நிற்கும் வடிவில், ராமரின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவத்தின் கீழே அயோத்யா ராமர் கோயிலின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளதோடு, மேற்பகுதியில் இந்தியில் ஸ்ரீராம ஜென்மபூமி என எழுதப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக் காண குவிந்த ஏராளமான பக்தர்கள், ராமர் உருவத்தைச் சுற்றி விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று பாதுகாப்பை உறுதிசெய்ய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த உள்ளது. அங்கீகரிக்கப்படாத ட்ரோன் பயன்பாட்டை கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது. ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும், அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரை வழங்கப்படுகிறது. ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.  அயோத்தி மற்றும் அண்டை மாவட்ட மக்களின் ஒருங்கிணைப்புடன், இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். உலகின் அதிநவீன தொழில்நுட்ப அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. இது அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் முக்கிய பகுதியாக இருக்கும்” என்று எஸ்பி வான்ஸ்வால் கூறியுள்ளார். கோயில் குடமுழுக்கு விழாவை நேரடியாக 4-கே தொழில்நுட்பத்தில் பல்வேறு பிராந்திய மொழிகளில் ஒளிபரப்ப, 40 கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Source link