top news India today abp nadu morning top India news April 2024 know full details



வீடு, வீடாக செல்லும் அலுவலர்கள்.. சென்னையில் இன்று முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று முதல் தொடங்கவுள்ளது.  இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. அதேசமயம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவானது நடக்கிறது. மேலும் படிக்க..

சித்திரை மாதம் – விஷு பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. எத்தனை நாட்கள் வழிபட அனுமதி?

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள். மேலும் படிக்க..

இன்று தோன்றும் முழு சூரிய கிரகணம்.. உலகில் எந்த பகுதியில் மக்கள் இதனை காணலாம்?

சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும்  ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும். சந்திர கிரகணம் என்பது பௌர்ணமி அன்று நிகழும், சூரிய கிரகணம் என்பது அமாவாசை அன்று நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..

ராகுல் காந்தி ஒதுங்க வேண்டும்! பாஜக வாக்கு வாங்கி எவ்வளவு தெரியுமா? – பிரசாந்த் கிஷோர் அதிரடி பேச்சு

மக்களவை தேர்தலில்  மேற்குவங்கம் மற்றும் தென் மாநிலங்களில் கூட பாஜக அலை வீசலாம் என, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார். நாடாளுமன்ற மக்களவ தேர்தல் தொடர்பாக பிடிஐ நிறுவனத்திற்கு, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்தார். அப்போது, ”எதிர்க்கட்சிகளுக்கு பாஜகவைத் தடுக்க மூன்று தனித்துவமான மற்றும் யதார்த்தமான வாய்ப்புகள் இருந்தன. அதாவது, 2014ல் மத்தியில் ஆட்சியை பிடித்தபோதும் மாநில சட்டமன்ற தேர்தலில் அடுத்தடுத்து தோல்வி கண்டது. பணமதிப்பு இழப்பு மற்றும் கொரோனா போன்ற பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் திறம்பட கையாளவில்லை. மேலும் படிக்க..

பிரதமர் மோடியின் தமிழக பயணத்தில் திடீர் மாற்றம்..! 5 அடுக்கு பாதுகாப்பு, 22,000 போலீசார் குவிப்பு

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருவதை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முக்கிய பகுதியான வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. அதில், முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியான நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க..

மேலும் காண

Source link