7 am headlines today 2024 31st January headlines news tamilnadu india world

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் தொழில் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவியும் செய்ய அரசு காத்திருக்கிறது; ஸ்பெயின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கு ஜூன் 9ல் குரூப் 4 தேர்வு; பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்; கொடி மரத்தை தாண்டி இந்து அல்லோதோர் செல்ல தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை
கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும், வேறு எதாவது அமைத்தால் எதிர்ப்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரசின் நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
அழகான நிலப்பரப்பும், துடிப்பான கலாச்சாரமும் இணையப் பெற்று, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் நாடு விளங்குகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் கடுமையாக சாடல்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்தியா: 

 பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மூன்றாமிடம் மற்றும் அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடமும் கிடைத்துள்ளது. 
சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குசீட்டில் பேனாவால் எழுதி செல்லாத ஓட்டாக்கியதாக அதிகாரி மீது குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி, காங்கிரஸ் எதிர்ப்பு
மத்திய பிரதேசத்தில் பெண் நீதிபதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

உலகம்:

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நிறைவேற்றம்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சி பேரணியில் குண்டுவெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு.
ஹூஸ்டன் மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் விமானம் மூலம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனர் பறக்கவிடப்பட்டது.
தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விளையாட்டு:

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
ரஞ்சி டிராபியில் கர்நாடகா அணியின் கேப்டனாக இருக்கும் மயங்க் அகர்வால், திடீரென உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ICU வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களத்திற்கு வெளியே விராட் கோலி வித்தியாசமான ஒரு நபர் என்று ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.
கேலோ இந்தியா விளையாட்டில் தமிழ்நாட்டில் நேற்றைய ஒரே நாளில் 6 தங்கம்- இன்று நிறைவு விழா
உ.பி.,யில், கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு, துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ப்ரோ கபடி லீக்: புனேரி பல்டன் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்

Published at : 31 Jan 2024 07:14 AM (IST)

மேலும் காண

Source link