Vishwaroopam: கமலை அலற விட்ட ஜெயலலிதா.. உதவ முன்வந்த கலைஞர் கருணாநிதி.. விஸ்வரூபத்தின் பின்னணி கதை!

விஸ்வரூபம் படத்தால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா – கமல்ஹாசன் இடையே பிரச்சினை வெடித்தது. இன்று அப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனைப் பற்றி காணலாம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் “விஸ்வரூபம்”. நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன், சக்ரி டோலேட்டி மற்றும் அதுல் திவாரி ஆகியோர் இணைந்து எழுதியிருந்தனர். தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு விஸ்வரூபம் வெளியானது. இப்படத்துக்கு ஷங்கர் மகாதேவன்-எஹ்சான்-லாய் இசையமைத்திருந்தனர்.

ஆனால் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து காட்சிகள் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு தடை போட வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கொதித்தெழுந்தனர். அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் முறையிட படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதற்கு 2 நாட்கள் முன்பு தடை விதிக்கப்பட்டது.

படத்துக்கு 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் நீதிமன்றத்தை நாடினர். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய நிர்வாகிகள் மத்தியில் படத்தை திரையிட்டு காட்டிஅவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கியும் படத்துக்கான தடை தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ‘என் சொத்துக்கள் அனைத்தையும் அடமானத்தில் வைத்து நான் விஸ்வரூபம் படத்தை இயக்கியுள்ளேன். இதை ரிலீஸ் செய்யாவிட்டால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேற போவதை தவிர வேறு வழி கிடையாது’ என கூறினார்.

இதனால் கமலுக்கு மக்கள் மத்தியில் அனுதாபம் எழ அது அன்றைய ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக விமர்சனமாக மாறியது. இதனால் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன்பின்னர் அடுத்த சில மாதங்களில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல்ஹாசன், நாட்டை விட்டு வெளியேறுவேன் என விஸ்வரூபம் படத்தை வெளியிடுவது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்ததால் கூறினேன். அப்படியெல்லாம் வெளியேற மாட்டேன். மேலும் இஸ்லாமிய சகோதரர்கள்  மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை. விஸ்வரூபம் படத்தைப் பார்த்தால் தெரியும். நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் தனக்கு ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பேசிய கமல்ஹாசன், ‘விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது நான் தடுமாறுவதை வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார் (ஜெயலலிதா). அப்போது  கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா ? என கேட்டார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் நான் இருக்கிறேன் என கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது.

Source link