இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 இதுவரை ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்பை எகிற செய்துகொண்டே வருகிறது. இன்னும் முதல் பாதி கூட கடக்கவில்லை, இருப்பினும் ஒவ்வொரு அணிகளும் எதிரணியை பந்தாடி புள்ளிப்பட்டியலில் போட்டா போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். புள்ளி பட்டியலில் கடைசியில் இருக்கும் அணிகள் கூட முதல் 4 இடங்களில் இருக்கும் அணியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்துகின்றன.
நேற்றைய போட்டியில் கூட இதேபோன்ற ஒரு நிலை அமைந்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 4வது இடத்தில் இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. இதன்மூலம், டெல்லி அணி நடப்பு சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2வது வெற்றியை பெற்றது. அதேநேரத்தில் லக்னோ அணி இந்த சீசனில் தனது 2வது தோல்வியை பெற்றது.
யார் யார் எந்த இடத்தில்..?
இந்த போட்டிக்கு முன் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் அதாவது 10வது இடத்தில் இருந்தது. லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தற்போது டெல்லி அணி 4 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியது. தோல்வியடைந்த லக்னோ மூன்றாவது இடத்தில் இருந்து, நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்த சீசனில் இதுவரை சிறந்த பார்மில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பின்னர் தலா 6 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முறையே இரண்டு, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே ஏழு, எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. இந்த சீசனில் இதுவரை 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கடைசி 10வது இடத்தில் உள்ளது.
தரவரிசை
அணிகள்
போட்டிகள்
வெற்றி
தோல்வி
புள்ளிகள்
ரன் ரேட்
1
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)
5
4
1
8
+0.871
2
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
4
3
1
6
+1.528
3
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
5
3
2
6
+0.666
4
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)
5
3
2
6
+0.436
5
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
5
3
2
6
+0.344
6
குஜராத் டைட்டன்ஸ் (GT)
6
3
3
6
-0.637
7
மும்பை இந்தியன்ஸ் (MI)
5
2
3
4
-0.073
8
பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
5
2
3
4
-0.196
9
டெல்லி கேபிடல்ஸ் (DC)
6
2
4
4
-0.975
10
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
6
1
5
2
-1.124
ஆரஞ்சு கேப்:
1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 6 போட்டிகள் (319 ரன்கள்)
2. ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 5 போட்டிகள் (261 ரன்கள்)
3. ஷுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்) – 6 போட்டிகள் (255 ரன்கள்)
4. சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 5 போட்டிகள் (246 ரன்கள்)
5. சாய் சுதர்ஷன் (குஜராத் டைட்டன்ஸ்) – 6 போட்டிகள் (226 ரன்கள்)
பர்பிள் கேப்:
1. ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்): 5 போட்டிகள் – 10 விக்கெட்டுகள், எகானமி: 5.95
2. யுஸ்வேந்திர சாஹல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 5 போட்டிகள் -10 விக்கெட்டுகள், எகானமி: 7.33
3. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 4 போட்டிகள் – 9 விக்கெட்டுகள் , எகானமி: 8.00
4. கலீல் அகமது (டெல்லி கேபிடல்ஸ்) – 6 போட்டிகள் – 9 விக்கெட்டுகள், எகானமி: 8.79
5. அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்) – 5 போட்டிகள் – 8 விக்கெட்டுகள், எகானமி: 8.72
மேலும் காண