Lok Sabha Election 2024 Irregularity in Karur postal balloting process – TNN | கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறையில் குளறுபடி


கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறையில் குளறுபடி உள்ளதாகவும் முறையாக கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

 
கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, 56 குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று அஞ்சல் வாக்குகளை பதிவு செய்யும் பணிகள் முடிகிறது. வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை பதிவு செய்தபின் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள தபால்வாக்குகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று மூடி முத்தரையிட்டு காவல்துறை மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 

 
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டுத்திருக்காம்புலியூர் பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் அனைத்து விதிமுறைகளும் கடைபித்து வாக்களிப்பதை பார்வையிட்டார். கரூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்குற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1804 பேரும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 1429 பேர் என மொத்தம் 3233 வாக்காளர்கள் வீட்டிலிருந்து படிவம் 12-டி மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 1331 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இரண்டாவது நாளாக  தொடர்ந்து வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 
 
 

 
இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் அக்ரஹாரம் பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மூன்று பேரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று, அதிகாரிகள் தபால் ஓட்டு போடுவதற்கான ஆவணங்களை வழங்கினர். ஆனால், தேர்தல் நடைமுறை விதிகளின்படி அஞ்சல் வாக்குகளை செலுத்தும் பெட்டிகளை அவர்கள் முன்னிலையில் வைக்காமல், வாக்கு செலுத்திய சீட்டுகளை கையில் பெற்றுக் கொண்டு, அதிகாரிகள் பையில் போட்டு எடுத்து சென்றனர். இதனால் கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா? என்ற சந்தேகமும், அஞ்சல் வாக்கு செலுத்தும் முறையில் குளறுபடி நடைபெறுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தபால் ஓட்டு போடும் முறை முறையாக கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 

மேலும் காண

Source link