ஐ.பி.எல் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 13 வது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
சென்னை – டெல்லி மோதல்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது. சென்னை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், டெல்லி அணியோ விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற சென்னை அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க டெல்லி அணியும் முனைப்பு காட்டுகிறது.
எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 19 முறையும், டெல்லி அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.  டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 110 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 198 ரன்களையும், குறைந்தபட்சமாக 83 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
டாஸ் வென்ற டெல்லி:
 
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதன்படி டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளாதால் அந்த அணி நிச்சயம் பெரிய இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிர்ணயிக்க முயற்சி செய்யும்.
டெல்லி அணி வீரர்கள்:
ரிஷப் பண்ட் (கேப்டன்) , பிருத்வி ஷா , டேவிட் வார்னர் , மிட்செல் மார்ஷ் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ்,  அபிஷேக் போரல்,  அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே,  முகேஷ் குமார், இஷாந்த் சர்மா
 
சென்னை அணி வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரன், அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான்
 
 

மேலும் காண

Source link


Latest News

View All

  1. купить мефедрон онлайн закладку метадона Мефедрон, кокаин, бошки, гашиш наркошоп сайт где можно купить таблетки трамадол закладку со скоростью купить…

  2. Вспоминаю случай из жизни. А работа стоит. Капельница от похмелья — И человеку становится легче. И голова начинает соображать. Вывод…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed