Vanitha vijayakumar gave hint about her next marriage has shocked the fans


ஒட்டுமொத்த குடும்பமே திரைத்துறையை சேர்ந்தவர்களாக கலக்கி வருவதுடன் தனக்கான  ஒரு தனி இடத்தையும் பிடித்துள்ளார்கள் நடிகர் விஜயகுமார் குடும்பம். அவரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார் பற்றி அறியாதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். சந்திரலேகா திரைப்படம் மூலம் விஜய் ஜோடியாக அறிமுகமான வனிதாவுக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். பெரிய அளவு வாய்ப்புகள் வராததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
திருமண வாழ்க்கையும் சரியாக அமைத்ததால் தனியாக மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தது வனிதாவுக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. கொளுத்தி போடும் வேலையை மிக சிறப்பாக பார்த்து பிக் பாஸ் வீட்டுக்குள் கலகத்தை ஏற்படுத்தி போட்டியை விறுவிறுப்பாக்கினார். அதன் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகமானார் வனிதா. 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதாவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்வானார். யூடியூப் சேனல் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சி ரிவ்யூ செய்வது என பிஸியாக இருந்து வருகிறார். ஏற்கனவே மூன்று திருமணம் செய்து மூன்றுமே தோல்வியில் முடிந்தது. வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரச்சனை செய்வதில் அம்மாவையே மிஞ்சிவிட்டார். மகளை திரைத்துறையில் ஒரு பெரிய ஹீரோயினாக ஆக்கிவிட வேண்டுமென தீவிரமாக செயல்பட்டு வருகிறார் வனிதா.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதை துவங்கியுள்ளார் நடிகை வனிதா. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ரசிகர்களும் அவர்களுக்கு விருப்பமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் ஒருவர் வனிதாவின் அடுத்த திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு வனிதா ஹார்ட் ஈமோஜியுடன் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பதில் அளித்து இருந்தார்.     
வனிதாவின் இந்த பதிலை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அடுத்ததாக எப்போ கல்யாணம்? எங்களையும் கூப்பிடுங்க என கேட்டதும் தமிழ்நாட்டையே இன்வைட் பண்றேன். போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்குறேன் என ஷாக் கொடுத்துள்ளார். அவரின் இந்த இன்ஸ்டண்டான பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஒரு சிலர் வனிதாவின் பதிலை சீரியஸாக எடுத்துக்கொண்டு பேசினாலும் பலர் அது நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம் என கூலாக விமர்சனம் செய்து வருகிறார்கள். 

மேலும் காண

Source link