சீனாவிற்காக உளவுபார்க்க வந்த புறா? 8 மாதங்களுக்க பிறகு ரிலீஸ் செய்த போலீஸ் : நடந்தது இதுதான்!

மன்னர் காலம் முதல் அண்டை நாடுகளை உளவு பார்க்க ஒற்றர்கள் எந்தளவு பயன்படுத்தப்பட்டார்களோ, அதே அளவிற்கு புறாக்களும் பயன்படுத்தப்பட்டது. நவீன காலத்தில் புதுப்புது யுக்திகள் அண்டை நாடுகளை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உளவு பார்க்க வந்த புறா?

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கமான உறவு கிடையாது. இரு நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இரு நாடுகளுமே தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்தாண்டு மே மாதம் 17ம் தேதி மும்பையில் உள்ள செம்பூர் அருகே புறா ஒன்று பிடிபட்டது. அந்த புறாவின் கால்களில் இரண்டு செம்பு வளையமும், ஒரு அலுமினிய வளையமும் இருந்தது. மேலும், அதன் கால்களில் கட்டப்பட்டிருந்த பேப்பரில் சீன மொழியில் ஏதோ வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதையறிந்த காவல்துறையினர் இந்த புறா சீனாவிற்காக உளவு பார்க்க வந்த பறவையோ? என்று சந்தேகித்தனர்.

எங்கிருந்து வந்தது?

இதையடுத்து, அதன் கால்களில் இருந்து கைப்பற்றப்பட்ட செம்பு வளையங்கள் மற்றும் அலுமினிய வளையங்களை பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த புறாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த புறா எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்தினர். அப்போது, இந்த புறா தைவானில் நடைபெற்ற பந்தயத்தில் பங்கேற்ற புறா என்றும், அப்போது இந்த புறா பந்தயத்தில் பங்கேற்றபோது வழி தவறி இந்தியாவிற்குள் வந்தது என்றும் கண்டறியப்பட்டது.

இந்த புறாவை போலீசார் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் வழங்கினால் மட்டுமே விடுக்க முடியும் என்ற சூழல் இருந்தது. இதனால், கடந்த மே மாதம் முதல் அந்த புறா கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த புறா உளவு பார்க்க வந்த புறா இல்லை என்று விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, புறாவை விடுக்க போலீசார் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் வழங்கினர். மேலும், புறாவின் உடல்நலம் நல்ல நிலையில் இருந்ததாலும், இந்த புறா கூண்டில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டது.

உளவு பார்க்க வந்த புறா என்று கருதி வழி தவறி வந்த பந்தய புறாவை 8 மாதங்கள் கூண்டில் அடைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Gyanvapi Mosque : முலாயம் சிங் பூட்டிய சர்ச்சைக்குரிய பகுதி: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு

மேலும் படிக்க: Tamil Nadu Assembly : ’பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்?’ தமிழக அரசு தயாரிக்கும் உரையை வாசிக்கும் ஆளுநர்..!

Source link