Religious storm should not come in How can you decide what I can eat athyaraj spoke | மதப்புயல் என்ற மடப்பயல்! நான் என்ன சாப்பிடனும்னு நீ எப்படி டிசைட் பண்ணலாம்?


திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் பேசியதாவது: “ஏன் மதப்புயல் என்ற மடப்புயல் உள்ளே வரக்கூடாது, நான் பாம்பேல ஒரு ஷூட்டிங் போனங்க. அங்க பீப் ஸ்டாலே இல்ல. நான் என்ன சாப்பிடலாம் எதை சாப்பிட கூடாது என்பதை டிசைட் பண்ண வேண்டியது நான்தானே. நீ எப்படி பண்ணலாம் நான் என்ன சாப்பிடலாம்ன்றத.
ஒற்றுமை சீர்குலைந்து போக கூடாது
இவ்வளவு ஆபத்து இருக்கு. மேலிருந்தவாரியா பார்த்த தெரியாது. ரொம்ப ஒற்றுமையா இருக்கிறோம். இங்கே  இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும், அனைத்து ஜாதியை சார்ந்தவர்களும் ஒற்றுமையாக இருக்கின்றோம். இந்த ஒற்றுமை சீர்குலைந்து போக கூடாது. ஏன்னா நம்ம முன்னோக்கி தான் போகணும்.
எல்லோருமே தந்தை பெயாரின் தொண்டர், அண்ணாவின் தொண்டர்.  எம்.ஜி.ஆர் அவர்களும் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரையிலும் பெரியார் வழி வந்தவங்க தான். எங்களுக்குள்ள இருக்குறதெல்லாம் பங்காளி சண்டை தான் பகையாளி சண்டை இல்லை. பெரியார் படத்துல நடிக்குறதுக்காக கலைஞர் கிட்ட வாழ்த்து வாங்க போன அப்போ. சத்தி, நீ தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன் தானே அடுத்த டைம் மேடையில நான் எம்.ஜி.ஆருக்காக எழுதின வசனம் ஒன்னு பேசிக்காட்டு என்று சொன்னார்.
பெருந்தலைவர் காமராஜர் கால ஆட்சியே திராவிட மாடல் ஆட்சி தான். ஏன்னா எல்லோரும் படிக்கணும்னு ஆசைப்பட்டாரு இல்ல பெருந்தலைவர். எல்லோரும் படிக்க வேண்டும் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் அப்டினு நெனச்ச தொடர்ச்சி பாருங்க.
திராவிட மாடல் ஆட்சிக்கு அரணாக இருக்க வேண்டும்
திராவிட மாடல் ஆட்சினா என்ன? சமூக நீதினா என்ன அப்டின்றத அவ்வளவு அழகா எடுத்து சொல்றாங்க. காமராஜர் ஆரம்பித்த மதிய உணவுத் திட்டம் எம்.ஜி.ஆர் காலத்தில் சத்துணவு திட்டமா மாறி , அதுல முட்டையை கொண்டு வந்து வைக்கிறாரு டாக்டர் கலைஞர் அவர்கள். அதை சிற்றுண்டியா மாத்துறாரு நம்ம ஸ்டாலின் அவர்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு அரணாகா நாம் எல்லோரும் இருக்க வேண்டும்” இவ்வாறு சத்யராஜ் பேசினார். 
 மேலும் படிக்க 
பிரதமர் மோடி தமிழகம் வரட்டும் நான் வேணானு சொல்லவில்லை..ஆனால் – முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?
Jharkhand Crime: நாட்டையே உலுக்கிய சம்பவம்! ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்க்கண்ட் அரசு!
MS Dhoni CSK: ஆரம்பமாகும் ஐபிஎல் 2024 – ஒரே சீசன், 3 ரோல்? சிஎஸ்கே அணிக்காக தோனி போட்ட புது ஸ்கெட்ச் – விவரம் என்ன?
 

மேலும் காண

Source link