16 வயது சிறுமி பாலியல் தொல்லை… 81 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை…

அரியலூரில் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 81 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். 81 வயதாகயன இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 11 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், சுந்தரத்தை மகளிர்‌ காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை‌ அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கர்ணன், குற்றவாளியான சுந்தரத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் சிறுமியின் குடும்பத்திற்க்கு 2 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்திரவிட்டார்.

இதே முதியவர் வேறு ஒரு சிறுயிமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது குறிப்பிடதக்கது.