கூகுளை பிங்க் கலராக மாற்றிய பார்பி… எப்படி தெரியுமா?

கூகுளில் பார்பி என்று தேடினால் மொத்த பக்கமும் பிங்க் நிறத்தில் வெடி வெடிப்பது போன்றும், எழுத்துக்கள் அனைத்தும் பிங்க் நிறத்திலும் மாறியுள்ளது.

ஹாலிவுட் திரைப்படமான பார்பி தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. க்ரெடா கர்விக் என்ற பெண் இயக்குநரின் படைப்பில் பார்பி உருவாகியுள்ளது. வார்னர் பிரதர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் பார்பியாக மார்கட் ராபி நடித்துள்ளார். இவருடைய பெயரை கிளிக் செய்தாலும் பிங்க நிரத்தில் வெடி வெடித்து. கூகுள் மொத்தமும் பிங்க் நிரமாக மாறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, கூகுள் நிறுவனம் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது.

பார்பியாக வரும் மார்கட் ராபி, நடிப்பில் அசத்தியுள்ளார். அவருடைய அந்த சிரிப்பு மட்டுமே, ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர் ஏற்கனவே, சூசைட் ஸ்குவாட், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், ஃபோகஸ், டெர்மினல் இப்படி பல படங்களில் நடித்துள்ளார்.