Tamil Nadu latest headlines news till afternoon 22nd February 2024 flash news details here | TN Headlines: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; தீவிரமாகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்



TN Assembly: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. தமிழ்நாடு முதலமைச்சர் திட்டவட்டம்..

2024-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை தொடங்கியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “பிப்ரவரி 15-ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19-ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும் படிக்க

தீவிரமாகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; 4-வது நாளாக இன்றும் கைது!

சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் நான்காவது நாளாக இன்றும் போராடி வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் படிக்க

TN Assembly: காவிரி விவகாரம்.. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி..

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த ஆட்சியில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.  இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் துரைமுருகன், “ஏற்கனவே இதற்கான விளக்கத்தை நான் கொடுத்திருக்கிறேன். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் இறுதியானது. மேலும் படிக்க

PM Modi TN Visit: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – 2 நாள் பயணத்தின் திட்டங்கள் என்ன?

பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் மூன்றாவது முறையாக அடுத்த வாரம், இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். இதில் பல்வேறு அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க

School Education: இனி ப்ளஸ் 2 வரை இலவசமாக உலகத்‌தர கல்வி: கல்வித்துறையுடன் கைகோத்த ஷிவ்நாடார் அறக்கட்டளை!

ஊரகப் பகுதிகளில்‌ பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத் தரம்‌ வாய்ந்த கல்வியை வழங்கிட பள்ளிக் கல்வித்துறைக்கும்‌ ஷிவ்‌ நாடார்‌ அறக்கட்டளைக்கும்‌ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில்‌ மேற்கொள்ளப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காகச் செயல்படுத்தி வருகிறது. மேலும் படிக்க
 

மேலும் காண

Source link