ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரை வேலு பார்த்துவிட்டு பின் தொடர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது வேலு போலீசுக்கு போன் போட்டு சுடர் வரும் காரை டோல்கேட்டில் மடக்கிப்பிடிக்க சொல்கிறான். இதையடுத்து போலீசும் டோல்கேட்டில் சோதனை போட சுடர் ஒரு வழியாக அவர்களிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகி விடுகிறாள்.
பிறகு எழில் ஹாஸ்பிடல் செல்வதற்காக வழியில் இறங்கிக் கொள்ள இவர்கள் வீட்டுக்கு வந்ததும் கனகவல்லி சுடரைப் பார்த்து “என்னாச்சுமா ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க, நடந்த விஷயங்களை சொல்ல அவர் “சரி நீ போய் ரெஸ்ட் எடுமா, நான் சாப்பாடு கொடுக்கிறேன்” என அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக லேட்டாக வீட்டுக்கு வரும் எழில் எல்லோரும் தூங்கிய பிறகு குழந்தைகளிடம் சென்று அன்பாக கேட்டுவிட்டு வெளியே வரும்போது சுடர் ரூமில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளே செல்ல அவள் காய்ச்சலால் தவித்துக் கொண்டிருக்கிறாள்.
இதனால் எழில் சுடருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்கிறான். இப்படியான நிலையில் இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Godzilla x Kong The New Empire Review: மான்ஸ்டர் வெர்ஸின் தல & தளபதி.. காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் பட விமர்சனம்!
மேலும் காண