Vijay TV Cook With Comali Comedy Reality Show Chef Dhamu Chef Venkatesh Bhat Issue


தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டீவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான்.
குறிப்பாக அது இது எது, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஆகிய ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டீவி மக்கள் மத்தியில் சென்றடைய முக்கியக் காரணமாக இருந்தன. இதனைப் பின்பற்றி மற்ற சேனல்கள் இதேபோன்ற ஷோக்களை நடத்தினர். இதனால் விஜய் டீவி தனது ரியாலிட்டி ஷோக்களில் புதுவிதமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியது. 
குறிப்பாக விஜய் டீவி மீடியா மேஷன் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து “குக்கு வித் கோமாளி” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியின் ஐடியா இதுவரை வந்த மற்ற ரியாலிட்டி ஷோக்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி விஜய் டீவியின் முன் பெரும்பான்மையான தமிழ் தெரிந்தவர்களை அமர வைத்தது. இதனால் விஜய் டீவிக்கு தனி மார்க்கெட் உருவானது. இந்த நிகழ்ச்சி கமர்ஷியலாகவும் பெரும் வெற்றி பெற்றது. 
விஜய் டீவியும் மீடியா மேஷனும் இணைந்து தொலைக்காட்சி வட்டாரத்தில் கோலோச்சிக் கொண்டு இருந்த நிலையில், திடீரென இவர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீடியா மேஷன் நிறுவனம் விஜய் டீவிக்கு இனிமேல் எந்த நிகழ்ச்சியும் தயாரித்து வழங்கப்போவது கிடையாது எனவும், ஏற்கனவே தயாரித்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளையும் நிறுத்திக்கொள்வதாக முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் குக்கு வித் கோமாளி ஷோவின் நடுவர்களில் ஒருவரான ஷெஃப் வெங்கடேஷ் பட்டும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக முன்னதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் செஃப் தாமுவும் விலகுவதாக அறிவித்து, பின்னர் அதிலிருந்து பின் வாங்கினார். 
இதனால் விஜய் டீவிக்கும் மீடியா மேஷனுக்கும் இருக்கும் பிரச்னை மட்டும் இல்லாமல், தற்போது செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகின்றது. இதனால்தான் செஃப் தாமு, தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார் என கூறப்படுகின்றது.
இந்தப் பிரச்னைகளால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை மீடியா மேஷன் தயாரிக்காது என்பது தெளிவாகியுள்ளது. இது குக்கு வித் கோமாளி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குக்கு வித் கோமாளியின் அடுத்த சீசனை யார் தயாரிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் அடுத்த சீசன் இதற்கு முன்னர் வந்த சீசன்களைப் போல் எண்டர்டெய்ன்மெண்டாக இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண

Source link