Tamil Nadu latest headlines news April 3rd 2024 flash news details know here



மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு ரூ.21,000 கோடி அபராதம் வசூல்; மோடி அரசின் டிஜிட்டல் வழிப்பறி – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.மேலும் படிக்க..

Lok Sabha Election 2024: மோடி சுடும் வடையை கூட மக்களுக்கு தராமல் அவரே சாப்பிட்டு விடுவார் – உதயநிதி ஸ்டாலின்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தில் பேசிய அவர்.. இந்த முறை அருண் நேருவை 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும். மேலும் படிக்க..

Lok Sabha Election 2024: தலையில் சிலிண்டருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் – விழுப்புரத்தில் சுவாரசியம்

விழுப்புரத்தில் ஒருங்கிணைத்த இந்திய குடியரசு கட்சி வேட்பாளருக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் அதன் வேட்பாளரே சிலிண்டரை தலையில் தூக்கி வைத்து கொண்டு நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுவாரசியம் சம்பவம் அரங்கேறியுள்ளது.மேலும் படிக்க

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 16 கன அடியில் இருந்து 5 கன அடியாக சரிந்தது

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 16 கன அடியாக இருந்தது.மேலும் படிக்க

முதல்வர் போல் மிமிகிக்ரி செய்து அதிமுகவுக்கு பரப்புரை செய்த பேச்சாளர் – தேனியில் சுவாரசியம்

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தபின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க..

மேலும் காண

Source link