Vishal: "என்னை சுற்றலில் விடுகிறார்கள்" ரத்னம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் விஷால் ஆவேசம்!

ரத்னம்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனிடையில் விஷால் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் தனது முந்தைய படமான மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸை தள்ளிப்போடும் படி சொன்னதாக ரெட் ஜயண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தனிநபரை விஷால் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ரத்னம் படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஷால்.

ஹிட் கொடுப்பாரா ஹரி?

இயக்குநர் ஹரி படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்துள்ளது என்றாலும் அண்மைக் காலங்களில் அவரது படங்கள் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. சூர்யா நடித்த சிங்கம் 3 பாக்ஸ் அஃபிஸில் எந்த விதமான அதிர்வலைகளையும் ஏற்படுத்தாமல் திரையரங்கை விட்டு வெளியேறியது, இப்படியான நிலையில் ரத்னம் படத்தில் தனது முந்தைய படங்களில் இருந்த குறைகளை சரிசெய்திருப்பதாக இயக்குநர் ஹரி தெரிவித்து ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

விஷால் ஆதங்கம்:

நாளை திரையரங்கில் ரத்னம் படம் வெளியாக இருக்கும் நிலையில்  நடிகர் விஷால் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவை திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தினருக்கு விஷால் அனுப்பியுள்ளார். இந்த ஆடியோவில் அவர்  “ ரத்னம் படம்  நாளை வெளியாக இருக்கும் கடைசி நேரத்தில் சம்பந்தம் இல்லாத ஒரு நபர்  நான் அவருக்கு பணம் தர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அவருக்கு தான் பணம் தரவேண்டும் என்பதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லாத இந்த கடிதத்தின் அடிப்படையில்  திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் ரத்னம் படத்திற்கான முன்பதிவுகளை இன்னும் தொடங்காமல் வைத்திருக்கிறார்கள். திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் கடந்த ஆறு மணி நேரமாக நான் தொடர்புகொள்ள முயற்சி செய்து வருகிறேன் . ஆனால் என்னை சுற்றலில் விடுகிறார்கள்.

இதுக்கு பேர் கட்டப் பஞ்சாயத்து

ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். இதை என் நண்பர் வாங்கி தயாரித்திருக்கிறார். இப்படி எந்த வித காரணமும் இல்லாமல்  நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் கொடுக்காமல் ஒரு படத்தின் ரிலீஸை நிறுத்தி வைத்திருப்பது என்பது கட்டப் பஞ்சாயத்து. கட்ட பஞ்சாயத்து செய்தால் அதற்கு என்ன தண்டனை என்பது அனைவருக்கும் தெரியும் . இந்த ஆடியோவை நான் முதலமைச்சர், திருச்சி மாவட்ட கலெக்டர் ஆகிய அனைவருக்கும் அனுப்பி இருக்கிறேன். சினிமாவில் நான் 19 ஆண்டுகளாக இருக்கும் விஷாலுக்கே இப்படி என்றால், ஒரு புதுமுக நடிகருக்கு என்ன கதி? ஏற்படும் என்பதால் தான் நான் இதை பதிவு செய்கிறேன். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நான் அதை செய்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஷால் இந்த ஆடியோவில் கூறியுள்ளார்

Source link