Ayalaan Ott Release Sivakarthikeyan Starring Movie Ott Release Date Platform Details

‘அயலான்’ (Ayalaan) திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘அயலான்’.
ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுத்திருந்தார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. குழந்தைகளைக் குறிவைத்து அயலான் திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தபடியே குழந்தை ஆடியன்ஸை குடும்பத்துடன் ஈர்த்து இப்படம் கல்லா கட்டி வருகிறது. முதல் நான்கு நாள்களிலேயே அயலான் திரைப்படம் ரூ.50 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்த நிலையில், தற்போது இப்படத்தின் வசூல் ரூ.100 கோடிகளை நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அயலான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி அயலான் படத்தின் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் நிறுவனம் பெற்றுள்ளதாகவும்,  வரும் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து படக்குழு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

Source link