Massive Wedding Fraud Unearthed In UP: Brides Seen Garlanding Themselves | Marriage Scam: நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி! மணமக்களை போல் நடித்தது அம்பலம்


Crime: உத்தர பிரதேசத்தில் அரசு சார்பில் 568 ஜோடிகளுக்கு நடித்தி வைத்த திருமணத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. 
நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி:
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாட்டையே திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் திருமணம் மோசடி ஒன்று நடந்துள்ளது. அதாவது, உத்தர பிரதேசத்தில் முதலமைச்சரின் வெகுஜன  திருமண திட்டம் பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. 
இந்த திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ரூ.35,000 ரொக்கமும், ரூ.10,000  மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த  நிலையில், இந்த திட்டத்தில் மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது. அதன்படி, பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25ஆம் தேதி  பாஜக எம்.எல்.ஏ கேட்கி சிங் முன்னிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டு திருமண விழாவில் ஒரே இடத்தில் 568 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
வைரல் வீடியோ:
இந்த கூட்டு திருமண நிகழ்வில் பங்கேற்க போதிய பெண்கள் இல்லாததால், பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட பெண்களையும், அவர்களது கணவர்களையும் அழைத்து வந்து, அவர்களை மீண்டும் மணமக்களாக நிறுத்தி உள்ளனர்.
மேலும்,  அதிமான பெண்கள் மணமேடையில் மணமகன் இல்லாமல் தனியாகவே நின்று கொண்டிருந்தனர்.  அவர்கள், திருமண சடங்குகளை தாமாகவே செய்தும், மாலை அணிவித்து கொண்டதும் அரங்கேறியது.  மேலும், முன்பின் தெரியாத நபர்கள் தம்பதிகள் போல் நடித்து மாலையை அணிவித்துக் கொண்டனர். 

Fake mass marriages in Uttar Pradesh! F.I.R. lodged. pic.twitter.com/w5VErWDHMm
— Jagrup Singh Parmar (@JagrupParmar) February 1, 2024

சில திருமண ஜோடிகள் அண்ணன்-சகோதரிகளாக இருந்தனர்.  நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து தனித்தனியாக கலைந்து சென்றனர்.  மணமகன், மணமகள் போன்று நடித்தவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை லஞ்சமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. 
சிக்கிய 15 பேர்:
இந்த திருமண நிகழ்வில் மணப்பெண்கள் மாலை அணிவிப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, மோடி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவாகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
விசாரணையில், திருமண நடத்தி வைக்கப்பட்டவர்களில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போலியான ஜோடிகள் என்றும், மணப்பெண், மணமகன் போல் நடித்தவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000 கொடுத்து நிற்க வைத்ததும், இந்த மோடி மூலம் ரூ.2 கோடி முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது. 

மேலும் காண

Source link