தமிழ்நாடு:
ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம்; திருநெல்வேலி, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம்
மோடி ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள், பட்டாசு வெடிப்பு; பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 8 இடங்களில் நேற்று வெயில் சதம்-திருப்பத்தூரில் அதிகபட்சமாக 108 டிகிரி கொளுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் கோலாகலமாக கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
மத்திய சென்னையில் பிரச்சாரத்திற்காக சென்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் காரில் மீண்டும் சோதனை
8வது முறையாக வரும் 15ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்; திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகிறார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா இன்று தொடக்கம்; வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி வைகையில் இறங்குகிறார் அழகர்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று (ஏப்ரல் 11) முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எழுச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி என்று திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறையில் கடந்து பத்து நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில், தற்போது நெல்லையில் கரடி நடமாட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா:
பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் களம் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர் என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினருக்கு தங்கள் வாரிசுகளை பற்றி மட்டும்தான் கவலை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்
உலகம்:
கட்டுமான பணிக்காக இந்தியாவில் இருந்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் வரவுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா எச்சரிக்கை.
இங்கிலாந்தில் விசா முறைகேடு; பெண் உள்பட 12 இந்தியர்கள் கைது.
ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 400 கோடி அபராதம் விதிப்பு. பாகிஸ்தானில் விபத்து: பள்ளத்தில் டிரக் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல்.
ஐ.எஸ்.எல் கால்பந்து: அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான தேதி அறிவிப்பு.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா
Published at : 12 Apr 2024 07:08 AM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண