Bigg Boss Vishnu: "பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது திட்டமிட்ட சதி" – பிக்பாஸ் விஷ்ணு பரபரப்பு பேட்டி

அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுவதற்காக ப்ரோமோஷன் மூலமாக ஒருவரை கெட்டவனாக காட்டும் செயல் தேவையற்றது என்று விஷ்ணு தெரிவித்துள்ளார்

பிக்பாஸ் எப்படியான ஒரு அனுபவம்

”வாழ்க்கையில் நாம் கற்பனை செய்ய முடியாது சூழ்நிலைகள் இந்த ஷோவில்  நமக்கு கொடுக்கப்படும் அந்த சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் விதம் நமக்குள் இருக்கும் ஒரு ஆற்றலை வெளிகொண்டு வரும் . பொதுவாக நான் அழமாட்டேன். ஆனால் மிக இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்தபோது அதுவும் நடந்திருக்கிறது. வெளியே வந்த பிறகு தான் நான் பிக்பாஸ் விட்டில் சும்மா இல்லை, நானும் சில விஷயங்களை மாற்றியிருக்கிறேன் என்று புரிந்தது.”

ஒருவரை கெட்டவனாக காட்டுவது ப்ரோமோஷன் கிடையாது

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா ப்ரோமோஷன்களால் வெற்றிபெற்றார் என்கிற குற்றச்சாட்டு குறித்து அவர் பேசினார் ”பிக்பாஸில் ப்ரோமோஷன் வேலைகளை ஓரளவிற்கு எல்லாம் செய்தோம். நான் என்னுடைய நண்பர்களிடம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். வாக்குகளைப் பெறுவதற்காக ப்ரோமோட் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரே வீட்டிற்குள் நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். அதே வீட்டில் இருக்கும் நான் ஏதாவது சின்னதாக தவறு செய்துவிட்டால் ஒரு நபரை நல்லவராக காட்ட என்னை கொஞ்சம் கெட்டவனாக காட்ட வேண்டிய தேவை ஏற்படுகிறது.

எல்லாரும் மீடியாவை ஒரு ஊடகமாக பயன்படுத்தி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தான் வந்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது ஒருவரை கெட்டவனாக காட்டிதான் அதை செய்ய வேண்டியது அவசியம் இல்லை.   நான் பார்த்த இன்னொரு விஷயம் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நான் எலிமினேட் ஆகிவிட்டேன் என்று நிறைய தவறான செய்திகள் பரவின. இதனால் என்னுடைய வாக்குகள் பாதிக்கப்படுகின்றன. அடுத்த முறை உங்களுக்கான பி.ஆர். டீம் உடன் உள்ளே போய்விடுங்கள் என்று பிக்பாஸ் வீட்டிற்குள் புது போட்டியாளர்களிடம் நான் இப்போதே அட்வைஸ் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நான் தான் எதுவும் தெரியாமல் இருந்துவிட்டேன்.”

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு

” நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. அங்கு ஏகப்பட்ட கேமராக்கள் இருந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கதவு இருக்கும் . அங்கு இருந்த போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாது. ஒருவர் ஏதாவது தவறாக செய்யப் போகிறார் என்று தெரிந்தால் உடனே ஆட்கள் வந்துவிடுவார்கள். பிரதீப் விஷயத்தைப் பொறுத்தவை ஒருவரை வெளியே அனுப்புவதற்காக எல்லாம் சேர்ந்து போட்ட திட்டமாக தான் நான் பார்க்கிறேன். கூல் சுரேஷுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை ஆனது.

திட்டமிட்ட சதி:

அதை பேசத்தான் நான் கமல்ஹாசனிடம் உரிமைகளை பேச வேண்டும் என்று பேச்செடுத்தேன். ஆனால் அந்த பிரச்சனை கூல் சுரேஷை விட்டு பிரதீப் நோக்கி சென்றது.  அவ்வளவு பேர் பார்க்கக் கூடிய நேரத்தில் கமல்ஹாசன் முன் அப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது, நான் கூட எனக்கு தெரியாமல் வேறு ஏதாவது தப்பாக நடந்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் நானும் ரெட் கார்ட் கொடுத்தேன். இதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக தான் நான் நினைத்தேன்.

ஆனால் இதெல்லாம் திட்டமிட்ட சதி என்று தெரிந்தபோது தான் நான் வருத்தப்பட்டேன். பிரதீப் தனது மனதில் எதுவும் வைத்துக் கொள்ளமாட்டார், அவருக்கு ஒரு நல்ல மனசு இருக்கிறது. தன மனதில் அவர் எதையும் வெளியே வைத்துக் கொள்ள மாட்டார். அது தான் ஏதோ ஒரு இடத்தில் அவருக்கு எதிராக திரும்பிவிட்டது என்று நினைக்கிறேன் “ என்று விஷ்ணு கூறினார்.

Source link