Shardul Thakur Hundred In Ranji Trophy Semi-final Mumbai Vs Tamil Nadu In The Ranji Trophy 2023-24

ரஞ்சி கோப்பை தொடர்:
விறுவிறுப்பாக தொடங்கிய ரஞ்சி கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
தடுமாறிய தமிழ்நாடு:
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், 64.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.  இதையடுத்து மும்பை அணி தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை முஷீர் கான் 24 ரன்களுடனும், மொஹித் அவஸ்தி ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸை தொடர்ந்தனர்.
 

HUNDRED FOR SHARDUL THAKUR IN RANJI SEMI WHEN TEAM WERE 106/7 🫡- The celebration was fire. 🔥pic.twitter.com/IubSed3uzF
— Johns. (@CricCrazyJohns) March 3, 2024

இதில் அவஸ்தி 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இவ்வாறாக 106 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை அணி.
சதம் விளாசிய தாக்கூர்:
 

WELL PLAYED, SHARDUL THAKUR 🫡- Mumbai were 106 for 7, trailing by 40 runs in the Semi-Final & then Shardul Thakur smashed 109 runs from 104 balls. What a knock, one to remember in his career, he is coming with great form in IPL for CSK. pic.twitter.com/eniweSE1rE
— Johns. (@CricCrazyJohns) March 3, 2024

அப்போது ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்திக் தோமர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் தங்களது நிதான ஆட்டத்தின் மூலம் மும்பை அணியை மீட்டனர். அதன்படி 89 வது பந்தில் ஷர்துல் தாக்கூர் 100 ரன்களை கடந்தார். அதன்படி, 104 பந்துகளில் 109 ரன்களை எடுத்தார். இதன் மூலம் ரஞ்சி கோப்பையில் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். கடைசியாக தாக்கூர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடினார். இச்சூழலில் மீண்டும் இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
 
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
 
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

Source link