Dr Ramadoss Says Modi Will Become The Prime Minister Of India For The Third Time After Indira Gandhi – TNN | Lok Sabha Election 2024: இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு 3வது முறையாக மோடி பிரதமராக வருவார்

பாஜக நானூறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வெற்றி பெற்று இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார் என  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் முரளி சங்கரை ஆதரித்தது திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இந்த கூட்டத்தில் ஜி.கே.மணி கலந்துக்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய மருத்துவர். ராமதாஸ்:
என் தாய் கிராமத்தில் இருந்து தேர்தல் பரப்புரை
என் தாய் கிராமத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை துவங்குகிறேன். பத்து தொகுதிகளை பெற்ற கட்சி, ஒரு கிராமத்தில் இருந்து பரப்புரை தொடங்குவதை எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். என் முதல் பரப்புரையை எளிய முறையில் தொடங்குகிறேன். இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். இந்திரா காந்தி மூன்று பிரதமராக இருந்தார், மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக உள்ளார். 400 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறுவார். இந்த வெற்றி கூட்டணி 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வாகி வெற்றி பெறுவோம். இதில் பாமகவை சேர்ந்த பத்து உறுப்பினர்களும் இருப்பார்கள்.
ஆண்களைவிட இன்று பெண்கள் சிறப்பாக படிக்கிறார்கள்
குடிசை அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். ஒவ்வொரு வீட்டிலும் படித்துள்ளவர்களுக்கு வேலை ஆகியவற்றை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பெண்கள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. ஒவ்வொரு குடும்பத்தின் மருத்துவ செலவை அரசே ஏற்கவேண்டும். ஜனாதிபதிக்கு கிடைக்கும் அந்த மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். கரும்புக்கு ஐந்தாயிரம் கொடுக்க வேண்டும். நெல்லுக்கு  மூன்றாயிரம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பெண்கள் இன்று தனியாக நடந்து செல்ல முடியவில்லை. ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத நிலை வேண்டும் என கடவுளிடம் வரம் கேட்பேன். ஆண்களைவிட இன்று பெண்கள் சிறப்பாக படிக்கிறார்கள். பெண்களை போற்ற வேண்டும். ஒரு காலத்தில் பெண் படிக்கக்கூடாது, சிரிக்கக்கூடாது என கூறினார்கள். ஆனால் இன்றைக்கு பெண்களுக்கு அதிக சுதந்திரம் உள்ளது. வீராங்கனையாக வலம் வருகிறார்கள். இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். மூன்றாவது முறை மோடி பிரதமராக வர வேண்டும்.
கோதாவரி, காவிரி இணைக்கும் திட்டம்
பிரதமரிடம் கோதாவரி, காவிரி இணைக்கும் திட்டத்தை வலியுறுத்த இருக்கிறேன். சிறந்த விளையாட்டு வீரரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். கூரை வீடுகள் அதிகம் உள்ள இந்த மாவட்டம் என்பதை மாற்றுவோம். கல்வியில் சிறந்த முதன்மையான மாவட்டமாக மாற்றுவோம். விவசாயத்திற்காக பாடுபடுவோம். எதிர்க்கட்சிகள் கோடிக்கனக்கில் செலவு செய்வார்கள். ஆனால் நான் எளிமையான முறையில் வாக்கு கேட்கிறேன்.
வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தி பெண்கள்
குறிப்பாக பெண் ஓட்டு அதிகம். வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தி பெண்கள். முக்கனியில் முதல் கனி பாம்பழம் அதில் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் இந்த நாட்டின் செல்வங்கள் நன்றாக இருக்க பாடுபடுவோம் என உரையாற்றினார். கோவடி கிராமத்தில் எளிய முறையில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். 

Source link