7 Am Headlines today 2024 april 6th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்காது – முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம் 
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
மக்களவை தேர்தலுக்கான தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் மரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி 
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் இன்று பரப்புரை 
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை – தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் 
நெருங்கும் மக்களவை தேர்தல் – இதுவரை தமிழ்நாட்டில் ரூ.193 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் 
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் – பொதுமக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 
மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் – மேலும் ஒரு ஆட்டை கொன்றதால் பொதுமக்கள் அச்சம் 
கோயில் திருவிழா பார்க்கச் சென்ற 2 இளம்பெண்கள் காதலர்கள் முன்பு பாலியல் வன்கொடுமை – திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்

இந்தியா:

இந்தியா கூட்டணி கட்சியினர் கமிஷனுக்காக மட்டுமே உழைக்கின்றனர் – பிரதமர் மோடி பேச்சு 
பெங்களூருவில் கோயில் திருவிழாவில் 120 அடி உயர தேர் சரிந்து விழுந்து விபத்து – பொதுமக்கள் உயிர் தப்பினர்
முறைகேடாக பண பரிமாற்றம் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கிய வருமான வரித்துறை 
கேரளாவில் பாஜகவின் வகுப்புவாத அரசியலை வேரூன்ற விட மாட்டோம் என முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டம் 
மக்களவை தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு 
டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவின் காவல் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு 
வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை 

உலகம்: 

ரஷ்யாவில் கனமழையால் அணை உடைந்தது – 2 லட்சம் மக்கள் வெளியேற்றம் 
இஸ்ரேலில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈராக் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு 
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அறிவிப்பு – அமெரிக்காவை ஒதுங்கி இருக்குமாறு எச்சரிக்கை 
நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஓமலா பகுதியில் 25 பேர் உயிரிழப்பு 
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி 

விளையாட்டு:

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதல் 
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டட்த்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல் 
விராட் கோலி சதம் வீண் – ஜோஸ் பட்லர் சதத்தால் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்
மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டதில் தவறில்லை – சவுரவ் கங்குலி ஆதரவு 

Published at : 07 Apr 2024 07:01 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link