rajinikanth vettaiyan movie to release on october month reveals lyca production


ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
வேட்டையன் (Vettaiyan)
ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன் (Vettaiyan). லைகா ப்ரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமூக கருத்துள்ள கமர்ஷியன் படமாக இந்த படம் இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
இப்படியான நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகில் வெளியாகும் என லைகா ப்ரோடக்‌ஷன் தெரிவித்துள்ளது.

Kuri vechachu. 🎯 VETTAIYAN 🕶️ is all set to take charge in cinemas 📽️ this OCTOBER 🗓️ Get ready to chase down the prey! 🦅😎#VETTAIYAN 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4… pic.twitter.com/VXvhN8ZBdm
— Lyca Productions (@LycaProductions) April 7, 2024
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று இந்தப் படத்தின் டைட்டில் வெளியானது. கேரளா, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா கடப்பாவில் நடைபெற்று வருகிறது. 
தலைவர் 171
வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். வரும் ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக அன்மையில் தகவல் வெளியானது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் லோகேஷ் கனகராஜ் படம்பிடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் மலையாள திரைத்துறையைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர்களோடு சேர்ந்து இந்தப் படத்திற்கான திரைக்கதை அவர் எழுதி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப் படும் என்று சமீபத்தில் தகவல் வெளியானது.

மேலும் காண

Source link