Karur News Mentally Challenged Youth Threatened To Commit Suicide – TNN | மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை மிரட்டல்

கரூரில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மிரட்டல் விடுத்த நிலையில் தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று இளைஞரை மீட்டனர்.
 

தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த ஜெயம்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ரஞ்சித் (வயது 27). Diploma in civil engineering முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக நண்பர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு மாத்திரை உட்கொள்ளாததால் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்.
 

 
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம், குணசீலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல பெரியகுளத்திலிருந்து புறப்பட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் தமிழ் நகரில் உள்ள ரவிச்சந்திரனின் அண்ணன் மணி வீட்டிற்கு தனது மகன் மற்றும் மனைவியுடன் வந்துள்ளார்.  காலையில் காரை வரவழைத்து குணசீலம் செல்ல தயாரான போது, ரஞ்சித் தன் விருப்பத்திற்கு மாறாக எங்கோ அழைத்துச் செல்கின்றனர் எனக் கூறி கூச்சலிட்டதுடன், வீட்டின் முன்பக்க கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கதவை திறக்கச் சொல்லியும் ரஞ்சித் மறுத்ததால், தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
 

 
அங்கு வந்த அவர்கள் இளைஞரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 10 நிமிடத்தில் திறந்து விடுவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார். 1 மணி நேரம் போராடியும் கதவை இளைஞர் திறக்காததால், தீயணைப்பு துறையினர் முன்பக்க கதவை அதிரடியாக உடைத்து உள்ளே சென்று இளைஞரை மீட்டனர். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரும், தீயணைப்பு துறையினரும் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை – 600 028.தொலைபேசி எண் – +91 44 2464 0050,   +91 44 2464 0060
 
 
 

Source link