Tamil Nadu latest headlines news till afternoon 19th February 2024 flash news details here | TN Headlines: நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை; சட்டப்பேரவையில் தாக்கலானது பட்ஜெட்



SV Sekar: பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு: நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை!- நீதிமன்றம் அதிரடி

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்க செயலாளர் அளித்த வழக்கில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

TN Budget 2024: தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.3.48 லட்சம் கோடி – நிதி பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, 2023-24 நிதியாண்டில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை  92 ஆயிரத்து 75 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில், திருத்த மதிப்பீட்டில் அது 94 ஆயிரத்து 60 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

TN Budget 2024: செம்ம.. இனி மாணவர்களுக்கும் மாதாமாதம் ரூ.1000- வெளியான அசத்தல் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

Tamil Nadu Budget 2024: கலைஞர் கனவுத் திட்டத்தில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டப்படும் – பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு

அந்த உரையை வாசித்தபோது, “ஆழி சூழ் தமிழ் நிலபரப்பிற்குள் அழையா விருந்தினர்போல் அவ்வப்போது வருகை புரிந்து இன்னல்கள் பல கொடுத்திடும் இயற்கை பேரிடர் ஒரு புறம் என்றால், கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபுறம். இவற்றுக்கிடையில் நாம் இருக்கிறோம். 2030ம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிடும் வகையில், கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் புதிய திட்டம் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மேலும் படிக்க

AIADMK Nomination: நெருங்கும் மக்களவை தேர்தல்.. 21 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்.. அதிமுக அறிவிப்பு..

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தரப்பில் 40 தொகுதிகலுக்கான விருப்ப மனு வரும் 21 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண

Source link