36 தமிழக மீனவர்களை விடுவித்தது பிரிட்டிஷ் கடற்படை… வீடியோ உள்ளே!

பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழகத்தின் தேங்காய்ப்பட்டின மீனவர்கள் 36 பேர் செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை கைது செய்த British Indian Ocean Territory நிர்வாகம், படகையும் பறிமுதல் செய்த‌து. இந்நிலையில், 36 மீனவர்களையும் British Indian Ocean Territory நிர்வாகம் விடுவித்துள்ளது.

அவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, 36 பேரையும்,

சொந்த ஊரான தேங்காய்ப்பட்டினத்திற்கு மீன்வளத்துறை மூலமாக அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.