கொல்லிமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்! எதற்காக தெரியுமா?

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் அரசு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 2 மற்றும் 3-ந் தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவின்போது மது பிரியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்லிமலை வட்டத்தில் செயல்படும் 4 டாஸ்மாக் மதுக்சில்லறை விற்பனை கடைகளை 3 நாட்களுக்கு அடைத்து வைக்க மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து செம்மேடு, செங்கரை, சோளக்காடு மற்றும் காரவள்ளியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்களுக்கு மூடி வைக்க நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருந்தார்.

அதன் காரணமாக, இன்று காலை டாஸ்மாக் மதுக்கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து 4-ம் தேதி பகல் 12 மணி வரை கொல்லிமலை வட்டத்தில் உள்ள 4 டாஸ்மாக் மதுக்கடைகளும் செயல்படாது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கள்ளச் சந்தையில் மது விற்கப்படும் சூழல் நிலவுவதால், அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சட்டவிரோம மது விற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதி ம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.