complaint filed against thalapathy vijay in dgp office for the GOAT whistle podu song lyrics


 GOAT படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு பாடல் இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியைத் தூண்டுவதாக விஜய் மீது புகாரளிக்கப் பட்டுள்ளது.
தி கோட் விசில் போடு (The GOAT Whistle Podu Song)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட் (The Greatest of All Time). இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு நேற்று வெளியானது. இந்தப் பாடலில் விஜய்யின் அரசியல் வருகையை சுட்டிக்காட்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருந்தன. பார்ட்டி ஒன்ன தொடங்கட்டுமா… கேம்பேயின தொறக்கட்டுமா என்று தொடங்கி ‘குடிமக்கதான் நம்ம கூட்டணி’ என்று பல்வேறு வரிகள் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்தப் பாடலின் பின்னணி முழுவதும் மதுபாட்டில்களின் ஸ்டைலில் அமைந்திருந்தது. 
தற்போது கோட் படத்தின் விசில் போடு பாடல் வரிகளை கண்டித்து நடிகர் விஜய் மீது சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப் பட்டுள்ளது. இந்த புகாரில் இளைஞர்களை தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் ,மற்றும் ரத்தவெறியை விஜய் தூண்டுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் முழு வடிவம் இதோ:
நடிகர் விஜய் அவர்கள் பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார்.
குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை!
அதிரடி கலக்கட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கைவில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான் நடிகர் கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகரை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது.
இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான், நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் நடிகர் விஜய். குடிமக்கள் தான் தம் கூட்டணி, நடிகர் விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை, குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயை திறக்கும் நடிகராக நடிகர் விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே . ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா  நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்.

மேலும் காண

Source link