14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘கருப்பு’

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’ வருகிற 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு

இந்தப் படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றியுள்ளார். படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நட்சத்திர பட்டியல்

படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா

சமீபத்தில் ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் வெளியான பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ட்ரெய்லர் விரைவில் வெளியீடு

இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ட்ரெய்லர் தற்போது தயாராகி வருவதாகவும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.


  1.  Avatar
    Anonymous

    waste of time

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed