Sun tv Ethirneechal serial today episode March 16 promo


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 15) எபிசோடில் தர்ஷினியிடம் இருந்து வாக்குமூலம் வாங்குவதாக நீதிபதி மருத்துவமனைக்கு வருகிறார். தர்ஷினி ஜீவானந்தத்தை நினைத்து அப்பா அப்பா என கதறியதை பார்த்த நீதிபதி மட்டுமின்றி அனைவருமே அவள் குணசேகரனை தான் சொல்கிறாள் என நினைக்கிறார்கள். தர்ஷினியின் இந்த நிலைக்கு ஈஸ்வரி தான் காரணம் அதனால் அவள் தர்ஷினியை நெருங்க கூடாது என நீதிபதியிடம் குணசேகரன் சொல்ல கதிர் ஈஸ்வரிக்கு ஆதரவாக பேசுகிறான். தர்ஷினி மருத்துவ உதவியுடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவள் குணசேகரன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிடுகிறார்.
 
ஹாஸ்பிடலுக்கு வந்த ஜனனி, ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைத்தது பற்றி கதிரிடம் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் குணசேகரன். தர்ஷினியை  வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். பித்து பிடித்தது போல இருக்கும் பேத்தியை பார்த்து கதறி அழுகிறார் விசாலாட்சி அம்மா. ஜனனி தர்ஷினியை பார்த்து அதிர்ச்சியாகி அவளை உடனே ஹாஸ்பிடலுக்கு அழைத்து போகலாம் என சொல்ல அவளை தொட விடாமல் தடுத்துவிடுகிறார் விசாலாட்சி அம்மா. தர்ஷினியை தண்ணீர் ஊற்றி வீட்டுக்குள் அழைத்து செல்லவேண்டும் என சொல்ல ஜனனி அதை தடுகிறாள். அவனுக்கு ஏற்கனவே ரத்த காயம் பட்டு இருக்கு தண்ணீர் ஊற்ற கூடாது என சொன்னதை கேட்காமல் தண்ணீர் ஊற்றி வீட்டுக்குள் அழைத்து செல்கிறார் விசாலாட்சி அம்மா. ஜனனி கவலையுடன் யோசித்து கொண்டு இருக்க ஆச்சி வந்து ஜனனியிடம் தன்னுடைய கதை பற்றி பேசுகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 
ஆச்சி ஜனனியிடம் “உன் வாழ்க்கையில நீ என்ன செய்யணும் என நினச்சியோ அதை செய். அதை செய்யாம நீ ஏன் இங்க இருக்க?” என சொல்ல “எனக்கு அப்படி சுயநலமா யோசிக்க எனக்கு தெரியல” என்கிறாள் ஜனனி. நந்தினி மற்றும் ரேணுகாவுடன் ஈஸ்வரி வீட்டுக்கு வருகிறாள். ஜனனி ஓடி வந்த ஈஸ்வரியிடம் “தர்ஷினி இப்போ வரைக்கும் அப்பா அப்பான்னு தான் சொல்லிட்டே இருக்கா. பெற எதுவும் பேசல அக்கா ” என சொல்கிறாள்.  “அவ அப்பான்னு சொல்றது ஜீவானந்தனை தான்” என சொன்னதும் அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
 

குணசேகரன் வெளியில் வந்து ஈஸ்வரியை மிரட்டி வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். “இனிமே உனக்கு மகனும் இல்ல மகளும் இல்ல. போடி வெளியே” என விரட்டுகிறார். “நான் போக மாட்டேன்” என ஈஸ்வரி சொல்ல அவளின் முடியை பிடித்து தரதரவென இழுத்து செல்கிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ. 

மேலும் காண

Source link