தனது மனைவி தன்னைத் திட்டிக்கொண்டே இருப்பதாக வீடியோ வெளியிட்டதைத் தொடர்ர்ந்து தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமான கருத்தைப் பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன்
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என ஏகப்பட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்கிறார். தமிழின் ‘லெஜண்ட் இயக்குநர்கள்’ வரிசையில் ஒருவராகவும் திகழ்கிறார். 
புதுப்பேட்டை 2
சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்படியான நிலையில் அவரிடம் இருந்து தரமான படம் ஒன்றை எதிர்பார்த்துக் கார்த்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அதற்கேற்றபடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவன் இந்த ஆண்டு புதுப்பேட்டை படம் வெளியாகும் என நம்புகிறேன் எனப் பதிவிட்டிருந்தது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது. மேலும் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் செல்வராகவன் நடித்துள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
மனைவியிடம் திட்டுவாங்கும் செல்வராகவன்

திரைப்படங்கள் இயக்கும் நேரம் தவிர்த்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் செல்வராகவன். குழந்தைகளின் பொம்மை வண்டியில் ஏறி விளையாடும் ரீல்ஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில்  அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலில் அவரை வீடியோ எடுத்து ‘ஏதாவது பேசு’ என்று சொல்ல பதிலுக்கு செல்வராகவன் “ உன்கூட என்னால இருக்கவும் முடியல , நீ இல்லாமலும் இருக்க முடியல. நீ என்ன திட்டிட்டே இருக்க. எனக்கு கிருக்கு பிடிக்குது’ என்று  சொல்கிறார். இந்த வீடியோ நேற்று இணையதளத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் சொல்வதை ஒரு தலைப்போடு சொல்லலாம் எனத் தோன்றியது. (புரிய வேண்டியவங்களுக்கு புரியும் குமாரு) என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த பதிவு யாரைக் குறிப்பிடுகிறது என்று புரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.

சொல்வதை ஒரு தலைப்போடு சொல்லலாம் என தோன்றியது. “” புரிய வேண்டியவங்களுக்கு புரியும் குமாரு “”
— selvaraghavan (@selvaraghavan) March 1, 2024

ராயன்
தனுஷின் 50ஆவது படமாக உருவாகியுள்ள படம் ராயன். தனுஷ் இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், வரலக்‌ஷ்மி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

மேலும் படிக்க :  Mari Selvaraj: திருமாவளவனுடன் இருப்பது பாதுகாப்பை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது – இயக்குனர் மாரி செல்வராஜ்
Vijay 69: விஜய் 69 படத்தின் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ்: குழம்பிய ரசிகர்கள்!

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…

  2. Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…

  3. Кейтеринговый банкет? https://furshetnye-nabory-s-dostavkoi.ru удобное решение для корпоратива, дня рождения, свадьбы или делового события. Выбирайте готовое меню или соберите собственный вариант…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed