Actor Rajinikanth’s Lal Salaam Movie Trailer Released


நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியாவதாக படக்குழு தெரிவித்திருந்த நிலையில், ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. லால் சலாம் படத்தின் ட்ரெய்லருக்காக இணையவாசிகள் பலர் காத்துக்கொண்டு உள்ளனர். 
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”. 3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கியுள்ளது பட அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்வும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

Anticipation mounts as Lal Salaam draws closer, just 4 days away! 🤩 #LalSalaam 🫡 In Cinemas 📽️✨ this FRIDAY, Feb 9th 2024 🗓️@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @Ananthika108 @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @RedGiantMovies_… pic.twitter.com/0Y7CTPwtXu
— Lyca Productions (@LycaProductions) February 5, 2024

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாளன்று ம்இதனிடையே கடந்த ஜனவரி 26 ஆம் தேதி சாய் ராம் கல்லூரியில் வைத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குநர் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு மிகப்பெரிய அளவில் வைரலானது. குறிப்பாக நடிகர் விஜய்யை குறிவைத்து தான் ஜெயிலர் பட விழாவில் காக்கா- கழுகு கதை சொன்னதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முதலில் இந்த ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 7 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். ஆனாலும் ஆர்வத்தோடு காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் வெளியாகவில்லை
 

மேலும் காண

Source link