முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கிக் கணக்குகள்; தற்காலிகமாக செயல்பட வருமானவரித்துறை தீர்ப்பாயம் ஒப்புதல்


அகில இந்திய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியதாக இன்று அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கண்டனங்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக முறையிடப்பட்டது. இதனால், வருமானவரித்துறை தரப்பில் இருந்து தற்காலிகமாக வங்கிக் கணக்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். 
காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர், அஜய் மக்கென் கூறுகையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தை நசுக்கும் செயல். இது தொடர்பாக வருமானவரித்துறையை நாடியபோது, கடந்த 2018 -2019 ஆம் நிதியாண்டின் செலவு கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக காங்கிரஸ் சமர்ப்பித்ததாக தெரிவித்தற்காக தற்போது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக கூறியதாக கூறினார்.  மேலும் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக நிதி பெறும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. முடகப்பட்ட கணக்குகளில் ரூபாய் 210 கோடி உள்ளது எனக் கூறினார். 
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், பயப்படாதீர்கள் மோடிஜி. காங்கிரஸின் பலம் பணத்தில் இல்லை. காங்கிரஸின் பலம் மக்கள்தான். ஜனநாயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை காங்கிரஸ் கட்சியினர் பலமாக எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள் என தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link