சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜூலி. இவரின் நிஜ பெயர் விசாலாட்சி என்றாலும் ஜூலி என்றே ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுகிறார். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல் ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஜூலி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கணவருடன் சேர்ந்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.
இரண்டு முறை அபார்ஷன் :
நடிகை ஜூலி திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆன போதிலும் குழந்தை இல்லாமல் மிகுந்த மனவேதனையில் தவித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் பட்ட கஷ்டம் அனுபவித்த வேதனை குறித்து வலியுடன் பகிர்ந்து இருந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்டோம். முதலில் கர்ப்பமாக இருந்த போது அபார்ஷன் ஆகிவிட்டது. இரண்டாவது முறையாக கருவுற்ற போது கரு கர்ப்பப்பை டியூபில் கரு உருவானதால் அதையும் அபார்ஷன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமான போது எனக்கு பயமாக இருந்தது. டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ் என வந்ததும் நான் அழுதுவிட்டேன்.
42 வயதில் குழந்தை :
எனக்கு வயதாகிவிட்டது. அதனால் இதற்கு பிறகு ட்ரீட்மென்ட் மூலம் குழந்தை பிறப்பது எல்லாம் மிகவும் சிரமம் என பலரும் சொன்னார்கள். ஆனால் எனக்கு இப்போது 42 வயதாகிறது. ட்ரீட்மென்ட் மூலம் தான் எனக்கு குழந்தை பிறக்க போகிறது என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. முதல் ஐந்து மாதங்கள் வரையில் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் சொல்லவில்லை.
ஒதுங்கி நின்றோம் :
எங்களுக்கு குழந்தை இல்லை என்பதால் நிறைய பங்க்ஷனுக்கு போகமாட்டோம். உங்களுக்கு இன்னும் குழந்தை இல்லையா என மற்றவர்கள் கேட்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கும். அதனாலேயே பல பங்க்ஷன்களுக்கு போவதை நிறுத்தி கொண்டோம். என்னுடைய குடும்பமும் கணவரின் குடும்பமும் தான் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். கணவோரட நண்பர்கள் எல்லாம் குழந்தைகளுடன் இருப்பார்கள். என்னுடைய கணவர் மட்டும் தனியாக நிற்பதை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.
வளைகாப்பு முடிந்தது :
இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் எனக்கு வளைகாப்பு நடந்து முடிந்தது. நானும் அவரும் ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அப்போ பங்க்ஷனுக்கு வந்தவங்க வளையல் போடும் போது இந்த நாளுக்காக தானே இத்தனை நாட்களாக நான் காத்திருந்தேன் என சொன்னதும் எங்களால அடக்க முடியாமல் அழுதுவிட்டோம். உண்மையிலேயே இந்த தருணத்திற்காக நாங்கள் பல ஆண்டுகளாக ஏங்கி இருந்தோம் என்றார் ஜூலி. இந்த தம்பதி ஆரோக்கியமாக குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என ரசிகர்களை வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் காண