தமிழ்நாடு:
தெற்கு வளர்வதோடு, வடக்கு வளர்வதற்கும் சேர்த்து வாரி வழங்குவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னை வருகை
சென்னை மெட்ரோ ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்கு பிங்க் ஸ்குவாட் அமைப்பு – பொதுமக்கள் வரவேற்பு
சென்னை வேப்பேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – கைது நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
தமிழக விவசாயிகளை திமுக வஞ்சிக்கிறது – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு – வழக்கு பிப்ரவரி 19க்கு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு – செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
3 நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி பயணம்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மாணவர்கள் கல்விக்கடன் பெற வசதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் – ஏராளமானோர் பங்கேற்பு
இந்தியா:
அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு கத்தார் சென்றார் பிரதமர் மோடி – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து – பெறப்பட்ட நிதிகளை திருப்பி அளிக்குமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியது
ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 14 ராக்கெட் – 27 மணி நேர கவுண்டவுன் இன்று தொடக்கம்
காஷ்மீரில் இருந்து மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து பாலக்காடு ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை
கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் சித்தராமையா – புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
அரியானாவில் செல்போன் இணையசேவை தடையை பிர்பவரி 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு
திருப்பதி உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்
உலகம்:
கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் 2 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவால் 1000 விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் வெற்றி பேரணியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
60 வயதில் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசு – பதவியில் இருக்கும்போது திருமணம் செய்பவர் என்ற சாதனைப் படைத்தார்
விளையாட்டு:
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: ரோகித், ஜடேஜா சதத்தால் முதல்நாளில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவிப்பு
டெஸ்டில் அறிமுகமானார் சர்ப்ராஸ் கான் – ஜடேஜாவின் தவறான அழைப்பால் 62 ரன்களில் அவுட்
சர்ப்ராஸ் கான் ரன் அவுட் – தவறுக்கு வருந்துவதாக ஜடேஜா இன்ஸ்டாகிராமில் பதிவு
சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணிக்கு சறுக்கல் – 15 இடங்கள் இறங்கி 117வது இடம் பிடித்துள்ளது.
Published at : 16 Feb 2024 06:52 AM (IST)
மேலும் காண

























Reading this site over the past week has changed how I evaluate content in this space, and a look at…