Pandari Bai: ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை: 1000 படங்களுக்கும் மேல் நடித்த பண்டரிபாய் நினைவு தினம் இன்று!

கர்நாடக மாநிலத்தின் பந்தல் கிராமத்தில் ஓவிய ஆசிரியர் ரங்காராவின் மகளாக பிறந்த ஒரு பெண் பின்னாளில் தென்னிந்திய சினிமாவின்  புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். அவர் தான் ‘தேன்மொழியாள்’ பண்டரிபாய். தன்னுடைய 14 வயதில் நடிகையாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 1000 படங்களுக்கும் மேல் நடித்து நடிப்பின் உதாரணமாக திகழ்ந்த பண்டரிபாயின் 21வது நினைவு தினம் இன்று. இந்த நாளில் அவரின் நினைவலைகள் சிலவற்றை ஞாபகங்களில் புதுப்பிப்போம்.

கலை மீது இருந்த அதீத ஆர்வத்தால் தன்னுடைய ஆசிரியர் பணியை விட்டுவிட்டு நாடக கம்பெனி ஒன்றை துவங்கினார் பண்டரிபாயின் தந்தை. தனக்கு கலை மீது ஆர்வம் இருந்தாலும் மகள்கள் நாடகங்களில் நடிக்க கூடாது என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார் அவரின் தந்தை. இருப்பினும் கதாகலாட்சேபம் கற்று கொடுத்து அவர்களின் திறமைகளை அதன் மூலம் வெளிப்படுத்த செய்தார். அதன் விளைவாக 10 வயதிலேயே மிக சிறப்பாக மராத்தி மற்றும் கன்னடத்தில் கதாகலாட்சேபம் செய்யும் திறனை பெற்றார் பண்டரிபாய்.

பண்டரிபாயின் திறமையை பார்த்த அவரின் அண்ணன் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க கன்னட படம் ஒன்றில் வாய்ப்பு பெற்று கொடுத்தார். தமிழில் தியாகராஜ பாகவதர் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படமான ‘ஹரிதாஸ்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிக்குள் அறிமுகமானார் பண்டரிபாய்.

1952ம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மட்டும் முதல் படம் அல்ல அது வரையில் சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த பண்டரிபாய்க்கு முக்கியமான கதாபாத்திரத்தில் சிவாஜியின் ஜோடியாக அங்கீகாரம் பெற்ற முதல் படம். ஆரம்ப காலகட்டத்தில் தமிழை கூட தெலுங்கு மொழியில் பேசிய பண்டரிபாய்க்கு சகஸ்ரநாமம் தமிழ் கற்று கொடுக்க அதை அழகாக கற்றுக்கொண்டு தெளிவாக வசனங்கள் பேசும் அளவிற்கு திறன் பெற்றார். பராசக்தி படத்தில் கலைஞரின் வசனங்களை அத்தனை இனிமையாகவும்   நேர்த்தியாகவும் பேசிய பண்டரிபாய் ‘தேன்மொழியாள்’ என கொண்டாடப்பட்டார்.

சிவாஜி கணேசன் தங்கையாக, மனைவியாக, அக்காவாக, தாயாக நடித்த ஒரே நடிகை பண்டரிபாய் என்ற பெருமை அவரை சேரும். எந்த கதாபாத்திரமானாலும் அதை அபாரமாக நடிக்க கூடிய பண்டரிபாய் 7 மொழி படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் அம்மாவாக ‘மன்னன்’ படத்தில் இடம் பெற்ற ‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே…’ என கே.ஜே யேசுதாஸ் குரலில் ஒலித்த பாடல் இன்றும் தாய்மையை போற்றும் மிக சிறந்த திரையிசை பாடல்களில்  முதலிடத்தை பெற்றுள்ளது. கமல், கார்த்திக், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படங்களில் கூட நடித்துள்ள பண்டரிபாய் விபத்தில் ஒன்றில் சிக்கியதில் தன்னுடைய கை ஒன்றை இழந்த பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். 2003ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி காலமானார். அவரின் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் இன்றும் என்றும் கதாபாத்திரங்களில் மூலம் நினைவுகளில் நிலைத்து இருப்பார்.

Source link