“எங்களுக்கும் போனஸ் கிடைக்குமா?”… ஏக்கத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்

தமிழக அரசு பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 2012 – ம் ஆண்டு ஓவியம் , உடற்கல்வி, தையல், கணினி, இசை உள்ளிட்ட பிரிவுகளில் 16, 500 பகுதிநேர ஆசிரியர்களை 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் படி படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கி தற்போது 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

Rashmika Mandanna: புஷ்பா 2 படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய ராஷ்மிகா? டோலிவுட் திரையுலகில் பரபரப்பு!

இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் போனஸ் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதியம், தினக்கூலி, பகுதிநேர பணியாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது. ஆனாலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்காமல் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 12 ஆண்டாக பணிபுரிகின்றவர்களுக்கு போனஸ் வழங்காமல் மறுத்துவருவது இந்த பள்ளிக்கல்வித்துறையில் மட்டுமே நடக்கிறது. அப்படி இருந்தும் ஒரு கோரிக்கை தொடர்ந்து எழும்போது நியாயமாக போனஸ் வழங்கவேண்டும் என்பதுதான் சரியான தீர்வு.

108 Ambulance: விழுப்புரத்தில் ஒரே ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள் இத்தனை பேரா?

இது சம்பந்தமாக பள்ளிக்கல்வி அமைச்சர் இந்த கோரிக்கை குறித்து உடனடியாக பரிசீலனை செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என உறுதிஅளித்து, உடனே அறிவிக்கவேண்டும். மேலும் 2500 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கடந்த 4-10-2023 அன்று வெளியிட்ட அறிவிப்பையும் உடனே செயல்படுத்த வேண்டும். அதுபோல் தமிழக முதல்வர் அவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி கருணையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்வர், தலைமைச்செயலாளர், முதல்வர் அலுவலகத்திற்கு அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADMK Meeting: "கூட்டணி குறித்து கவலை வேண்டாம்" மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இ.பி.எஸ். உத்தரவாதம்

Source link